
ஏன் அறிவு , அசல் கோலார், பால் டப்பா போன்ற இந்த கலைஞர்கள் இன்னும் கொண்டாடப் பட வேண்டும் என சொல்ல என்னை விட பொருத்தமான ஒருவன் இல்லை.
எந்த குடும்ப பின்னணியும் இன்றி , தன் வாழ்க்கையின் வலிகளை கலையாக வடித்து , இதெல்லாம் ஒரு இசையா என மட்டம் தட்டும் ‘இசை என்றால் என்ன தெரியுமா’ என்ற கூட்டங்களின் இசை அரசியலை உடைத்து , சுதந்திர இசை மூலம் இன்று தமிழ் இசையுலகின் ஆளுமைகளாக இருக்கும் என் தமிழ் ஹிப்ஹாப் தம்பிகளை கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்! இதை ஒரு சுதந்திர இசை புரட்சியாகவே பார்க்கிறேன். Network, background இன்றி இதை போல் ஒரு industryல் மேலேறி வருவது எவ்வளவு கடினம் என்று மேலேறி கொண்டிருக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் தெரியும். நாளை பற்பல சுதந்திர கலைஞர்கள் சுயம்பாக தோன்ற இன்று அறிவு, அசல் போன்றோர் செய்யும் பங்களிப்பு மிக முக்கியம். என்னப்பா இப்ப தானே ஆரம்பிக்குது அதுக்குள்ள என்ன சாதிச்ச மாதிரி பேசுற என கேட்போருக்கு- இது இங்க ஆரம்பிச்சதே சாதனை தான்! வாழ்க என் அருமை தம்பிகள் - ஆள்க இந்த இசை உலகை ❤️