என் இசையோ , கலையோ ஒருவரை எப்படி தொடுகிறது என்று நான் ஆராய முற்படுவதில்லை. ஆனால் அவை தொடும் இடங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதை விட மன நிறைவையும் , பொறுப்புணர்வையுமே அதிகமாக அளிக்கிறது ! அகிலேஷ் என் ஒவ்வொரு படத்தையும் பல முறை பார்ப்பதும், என் இசை கேட்டவுடன் இது ஹிப்ஹாப் தமிழா மியூசிக் என்று கரெக்டாக சொல்லுவான் என்று அவன் பெற்றோர்கள் சொன்னது, நான் என்ன தவம் செய்தேன் என் கலை கொண்டு இப்படி அன்பு சொந்தங்கள் பெற என்ற நன்றி உணர்வயே மேலோங்கி எழ செய்கிறது!